Friday, October 16, 2015

குழந்தைகளின், புகைப்படங்களை பேஸ்புக்கில் பதியாதீர்கள் : பொலிஸார் அதிரடி.

1 comments
                          

பெண் குழந்தைகளின் புகைப்படங்களை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவு வேண்டாம் என பெற்றோர்களை பொலிசார் வலியுறுத்தியுள்ளனர். 


பொலிசார் நேற்று பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். 

அதில், பெண் குழந்தைகள் குறிப்பாக கடற்கரையில் அரை நிர்வாணமாக விளையாடும் பெண் குழந்தைகளின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். 


குழந்தைகளாக உள்ளபோது புகைப்படங்களை இணையத்தில் பதிவது ஒரு வித உற்சாகமான விடயமாக இருக்கும். ஆனால், குழந்தைகள் வளரும்போது அவர்களின் எதிர்காலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. 


மேலும், பெண் குழந்தைகளை குறி வைத்து பாலியல் ரீதியாக மோகம் கொண்டுள்ள நபர்களின் கைகளில் அந்த புகைப்படங்கள் கிடைத்தால் அவற்றை அவர்களின் சொந்த நோக்கங்களுக்கு பயன்படுத்திக்கொள்வார்கள். 


குழந்தைகளுக்கென தனி உரிமையும் சுதந்திரமும் இருப்பதால், அவற்றை சீர்குழைக்கும் வகையில் அவர்களின் புகைப்படங்களை இணையத்தில் பதிவது அவசியமற்ற பிரச்சனைகளுக்கு கொண்டு சென்று விடும். 


எனவே, குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தில் ஏற்றுவதை பெற்றோர்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என வடக்கு Rhine-Westphalia மாகாணத்தில் உள்ள Hagen நகரை சேர்ந்த பொலிசார் வலியுறுத்தியுள்ளனர்.

Continue Reading...

Thursday, October 15, 2015

சில நாட்களில் எம்மை அடையவுள்ள முஹர்ரம் மாதத்தின் சிறப்பு.. (ஒரு சுவாரஸ்ய பார்வை)

0 comments
முஹர்ரம் ..


இது நம் ச்முதாயம் மறந்த ஒரு முக்கிய நாள்.இதன் முக்கியத்துவத்தை  ஜனவிக்கே கொடுக்கப்படுகிறது. நான்கு  மாதங்கள்  முஸ்லிகளுக்கு சிறப்பானமாதங்கள் .அவை: துகஃதா,  துல்ஹஜ்,  முஹர்ரம் ,  ரஜப்.


முஹர்ரம்  எனும்  அரபு பதத்தின் பொருள் "விலக்கப்பட்டது"என்பதாகும் .எம்முடைய கலாகதிர் புதுபிக்கப்படும் நாள் .ஆதலால்  பாவமன்னிப்பு இந்த நாளில்  அதிகாமாக கேட்க்கப்பட வேண்டும்.


அரபி மாதத்தின் முதல் மாதமான முஹரமாகும். இந்த மாதத்தின் சிறப்பு என்னவென்றால், முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் வாழ்ந்த இறை தூதரான மூஸா (அலை) அவர்களால் ப்ரவுன்என்ற கொடுங்கோல் ஆட்சியாளனை கடலில் அல்லாஹ் மூழ்கடித்து,


மூஸா (அலை) அவர்களைவெற்றி பெற செய்த நாள்தான் இந்த மாதத்தின் பிறை 10-ஆம் நாள் ஆகும். முஹம்மது (ஸல்) அவர்கள்காலத்தில் வாழ்ந்த யூதர்கள் இந்த மாதத்தின் 10-ஆம் நாள் அன்று நோன்பு நோற்று வந்தார்கள். அவர்களைகண்ட நபிகள் பெருமானார் எதற்காக நீங்கள் நோன்பு நோற்கிறீர்கள் என்று வினாவினார்கள். அவர்கள் மூஸா (அலை) அவர்கள் ப்ரவுனை வெற்றி பெற்ற இந்த நாளை நாங்கள் நன்றி சொல்லும் விதமாக நோன்புநோற்று வருகிறோம் என்றும் சொன்னார்கள்.


அப்பொழுதுதான் நபி (ஸல்) சொன்னார்கள், மூஸா (அலை)அவர்கள் வெற்றி பெற்ற இந்த நாளுக்கு நன்றி சொல்வதற்க்கு உங்களைவிட நாங்களே சிறந்தவர்கள் என்றுகூறிவிட்டு, அன்றைய தினத்திலிருந்து இஸ்லாமியர்களை முஹரம் 10-ஆம் நாள் நோன்பு நோற்க சொல்லிதந்தார் நமது நபி அவர்கள்.


ஆனால் தான் இறப்பதற்கு முந்தைய வருடம் நபி (ஸல்) அவர்கள், அடுத்த வருடம் நான் உயிரோடு இருந்தால்,யூதர்களை போலவே நாமும் 10-ஆம் நாள் மட்டும் நோன்பு நோற்க கூடாது, நாம் அதற்கு வித்தியாசமாக,இன்னும் கூடுதலாக 9, 10 ஆகிய இரண்டு நாட்களும் சேர்ந்து நோன்பு நோற்க வேண்டும் என்று வலியுறுத்திஇருக்கிறார்கள். ஆனால் அதை அறிவித்த அடுத்த வருடம் நபி (ஸல்) இந்த பூமியில் உயிரோடு இல்லை.இறைவனடி சேர்ந்தார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்)


நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த இந்த நோன்பைதான் ஆஷூரா நோன்பு என்று அழைக்கிறோம். முஹர்ரம்மாதத்தின் பிறை 9,10 அல்லது 10,11 ஆகிய இரண்டு நாட்கள் நோன்பு நோற்றால் அல்லாஹ் ஒரு வருடகால பாவங்களை மன்னிப்பான் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அறிவித்து இருக்கிறார்கள்.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். "இது என்ன நாள்?" என்று கேட்டார்கள். "இது மாபெரும் நாள்! மூஸா (அலைஹி ஸலாம்) அவர்களை இந்த நாளில்தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலைஹி ஸலாம்) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்" என்று யூதர்கள் கூறினர். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன்' என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களையும் நோன்பு நோற்கும்படி கட்டளையிட்டார்கள்.


அறிவிப்பவர்: ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: புகாரி(3397)



பாவங்களுக்கு பரிகாரம்


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்,
"முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா)நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்."
அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூகதாதா (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: முஸ்லிம்(1976)



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு,  'அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும்' என்றார்கள்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூகதாதா (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: முஸ்லிம் (1977)



யூதர்களுக்கு மாறு செய்தல்


அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், '(அது) யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?' என்று வினவினர். அதற்கு நபி (ஸல்) 'இன்ஷா அல்லாஹ், (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் (சேர்த்து) நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்கள் மரணித்து விட்டார்கள்.


இத்தனை சிறப்புகள்  கொண்ட நாளை நாம் தவர் விடாது பயன்படுத்திக்கொள்ள அல்லாஹ் எமக்கு உதவி செய்வானாக .ஆமீன்.
Continue Reading...
 

h t Copyright © 2012 Template Designed by BTDesigner Published..Blogger Templates· Powered by Blogger